இன்னும் என்ன செய்ய போகிறது இந்த அரசு? – இயக்குநர் ரஞ்சித்

இன்னும் என்ன செய்ய போகிறது இந்த அரசு? என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ரஞ்சித் கடுமையாக சாடியுள்ளார்.

கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட ‘ஒக்கி’ புயலால் குமரி மாவட்டத்தில் பெரும் பாதிப்பு நிகழ்ந்தது. புயல் எச்சரிக்கையை சரியான நேரத்திற்கு மீனவர்களுக்கு இந்திய அரசு அறிவிக்காததால் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கச் சென்றிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புயலில் அடித்து செல்லப்பட்டனர். மாயமான மீனவர்கள் நிலை குறித்து இன்றுஅளவும் தெரியாத சூழல் உள்ளது.

கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணிலயில் மத்திய-மாநில அரசுகள் சரியான முறையில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று குமாரி மீனவ மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் நிலையை அறிந்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. கேரள அரசும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது.

இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழக அரசியல்வாதிகள் பலரும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனை கடுமையாக சாடியுள்ளார் இயக்குநர் ரஞ்சித். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பா.ரஞ்சித் கூறியிருப்பதாவது:

இன்னும் என்ன செய்ய போகிறது இந்த அரசு? கடலுக்குள் சென்று வீடு திரும்பாத என்னற்ற சகோதரர்களை எதிர்ப்பபார்த்து பெரும் வலி சுமந்து காத்திருக்கும் குடும்பத்தாரின் கண்ணீர் உங்களை ஒன்றுமே செய்யாதா? ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் என்ன செய்துவிடுவீர்கள்??

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top