ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் அறிவிப்பு

கன்னியாகுமரி:

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து மீட்க வலியுறுத்தி தொடர்ந்து இன்று 13வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

தூத்தூரில் மீனவ பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மீனவர்கள் தரப்பில் காணாமல் போன மீனவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சீரமைப்பு, நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மத்தியில் முதல் அமைச்சர் பழனிசாமி இன்று பேசினார். அவர் பேசும்பொழுது, ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூ.20 லட்சம் வழங்கப்படும்.

மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு பணி வழங்கப்படும். புயலால் சேதமடைந்த படகுகளை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்கப்படும். மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சட்ட விதிகள் தளர்த்தப்படும்.

ஒகி புயலால் காணாமல் போன கடைசி மீனவரை மீட்கும் வரை தேடுதல் பணி தொடரும். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை தேடும் பணி தொடருகிறது என கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top