ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு, வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் – உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி:

கடந்த ஆண்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை என்று மத்திய அரசு அறிவித்தது, இதை தொடர்ந்து தமிழநாட்டில் மாணவர்கல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் போராட்டம் மக்களின் ஆதரவு கூடியதால் மாணவர் புரட்சியாக மாறியது. தமிழநாட்டின் பண்பாடு மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளில் மத்திய அரசு தலையிட்டால் அது மாநில உரிமையை மீறும் செயல் என்றும் மற்றும் ஜல்லிக்கட்டு தடையை விளக்க கோரி போராட்டம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தரமாக நடத்தும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதேபோல் கர்நாடகாவில் பாரம்பரியமாக நடத்தப்படும் கம்பளா எனப்படும், எருது பந்தயத்தை தடையின்றி நடத்துவதற்காக சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டங்களை எதிர்த்து பீட்டா, விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் பொது சட்டங்களை மீறும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்ற முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்க்கும் மனுக்கள் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். எனவே, இனி அரசியல் சாசன அமர்வு இவ்வழக்கை விசாரிக்கும்.

அதேசமயம், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டனர். எனவே, ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் இல்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top