தேர்தல் விவாதத்தில் எங்களை இழுப்பதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் : பாக்கிஸ்தான் கண்டனம்

இஸ்லாமாபாத்:

குஜராத் சட்டசபை தேர்தலை ஒட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி. கூட்டத்தில் பேசும் போது, பாகிஸ்தான் ராணுவ தளபதி காங்கிரஸ் தலைவர் அகமது படேலை முதல்வராக்க முயற்சித்து வருகிறார் என்றும், பாகிஸ்தான் நாட்டு தூதர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் ரகசியமாக சந்தித்து வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

பிரதமராக இருந்து கொண்டு மோடி தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்க கூடாது என்றும், பாகிஸ்தான் தூதரை சந்தித்ததை ஆதாரப்பூர்வமான நிரூபிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், குஜராத் தேர்தலில் பாகிஸ்தானை விவாதப்பொருளாக மோடி ஆகியுள்ளதால், கடுப்படைந்துள்ள அந்நாட்டு வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் இந்தியாவை கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

“பாகிஸ்தானை, இந்தியா அதன் தேர்தல் விவாதத்தில் இழுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் மற்றும் சொந்த பலத்தில் தான் வெல்ல வேண்டுமே தவிர ஆதாரமற்ற, பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளால் அல்ல” என்று கூறியுள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top