கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒக்கி புயலில் சிக்கி மாயமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் கதி இதுவரை என்னவென்று தெரியவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் வழங்கவில்லை. ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய அரசு உடனே அறிவிக்கவேண்டும். மேலும் காணாமல் போன மீனவர்களை மீட்பதற்கு மத்திய-மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 13-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கன்னியாகுமரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஒக்கி புயல் குறித்து உரிய முன்னறிவிப்பை மத்திய-மாநில அரசுகள் செய்திருந்தால் இந்த அளவுக்கு மீனவ மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top