நாகை கலெக்டர் அலுவலகம் முற்றுகை – மீனவ பெண்கள் போராட்டம்

கீழ்வேளூர்:

கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் ஏராளமானோர் ஒக்கி புயலில் சிக்கி மாயமானார்கள். காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தர கோரி குமரி மாவட்டத்தில் மீனவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

இதை தொடர்ந்து ஓக்கி புயலில் சிக்கி நாகையை சேர்ந்த 12 மீனவர்கள் மாயமாகி உள்ளனர். இதுவரை அவர்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை.

இதைதொடர்ந்து நாகை நம்பியார் நகரை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் இன்று காலை ஊர்வலமாக நாகை கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர்.

அப்போது பெண்கள், புயலில் சிக்கி மாயமான குமாரி மற்றும் நாகை மீனவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. மத்திய- மாநில அரசுகள் இதுவரை மீட்பு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. மாயமான மீனவர்களை கண்டு பிடிக்கும் வரை நாங்கள் யாரும் வீட்டுக்கு செல்ல மாட்டோம்’ என்று ஆவேசத்துடன் கூறினர்.

இதையடுத்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள், போலீசார் ஆகியோர் போராட்டம் நடத்திய பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மீனவ பெண்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top