கடலில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி ரெயில் மறியல் நடத்திய 9 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி:

கடந்த வாரம் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ஒக்கி புயல் குமரி மாவட்டம், கேரளாவின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சேதத்தை உண்டாக்கியது.
ஒக்கி புயலால் குமரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது.

தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், கடந்த 30-ம் தேதி தாக்கிய ‘ஒக்கி’ புயலில் சிக்கி மாயமானார்கள். இதில் இன்னும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களை தேடும் பணியில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கிடையே, மாயமான மீனவர்களை மீட்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து தீவிரமாக செயல்படவில்லை. மாயமாகி இன்னும் கரை திரும்பாத மீனவர்களை மீட்க விரைவாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் தரப்பில் குழித்துறை ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

குளச்சல் உள்பட பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், இத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுமார் 9 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top