விஸ்வாசம் படத்தின் அடுத்த நகர்வு – சிவா

வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என தொடர்ந்து மூன்று படங்களில் இயக்குனர் சிவா மற்றும் நடிகர் அஜித் இணைந்து வழங்கியுள்ளார். இவர்கள் இருவர் கூட்டணியில் கடைசியாக உருவான விவேகம் படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்று இருந்தாலும் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து உள்ளனர். புதிய படத்திற்கு ‘விஸ்வாசம்’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். அஜித்தின் 58வது படமாக உருவாகும் இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த சில படங்களாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த வந்த அஜித் இந்தப்படத்தில் இளமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் அஜித்தை வித்தியாசமான ஸ்டைலில் மாற்றி காண்பிக்க இருக்கிறார் இயக்குனர் சிவா. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்திற்காக அலுவலக பூஜை நேற்று போடப்பட்டுள்ளது. இதில் இயக்குனர் சிவா, எடிட்டர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இப்படத்தில் அஜித்துடன் ‘வீரம்’ படத்தில் நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்த பாலா, ‘விஸ்வாசம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top