இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம்: அமெரிக்க முடிவை நிராகரித்த ஐ. நா. பாதுகாப்பு சபை

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை அறிவித்தார்.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைவராக ட்ரம்ப் அறிவித்ததிலிருந்து பாலஸ்தீனத்தில் போராட்டம் வெடித்தது. இந்த அறிவிப்பை கண்டித்து உலக நாடுகள் ட்ரம்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

ட்ரம்பின் இந்த அறிவிப்பிற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தனர். ஒட்டுமொத்த அமைதியை குலைக்கும் அறிவிப்பு இது என பல்வேறு நாட்டு தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்கள் கொண்ட குழு ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் உள்ள காசா எல்லையில் பாலஸ்தீனர்கள் இன்று திரளாக ஒன்றுகூடினர். அவர்கள் ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.

குவிக்கப்பட்டு இருந்தனர். அப்போது பேரணியில் ஈடுபட்டோர் டிரம்ப் உருவப் படத்தை தீயிட்டு எரித்தனர். இஸ்ரேல் ராணுவத்தினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, ராணுவத்தின பேரணியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். முதல் கட்டமாக இரண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்கள் கொண்ட குழு ஆலோசனை மேற்கொண்டது.

இன்று இந்த கூட்டத்தின் முடிவில் ஜெருசலேம் தொடர்பான பிரச்சனை பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். எங்களைப் பொறுத்தவரை ஜெருசலேம் இரு நாட்டுக்கும் பொதுவான தலைநகரமாகதான் உள்ளது. ஐந்து ஐரோப்பிய நாடுகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்துள்ளதை ஐ. நா. சபை நிராகரித்துள்ளது.

ஐ. நா. பாதுகாப்பு சபையின் இந்த முடிவு குறித்து ஐ. நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹலே, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், இது இஸ்ரேலுக்கு எதிரான விரோதப் போக்கு என்று கூறியுள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top