விளம்பரத்திற்காக ரூ. 3,755 கோடி செலவு செய்த மோடி அரசு

புதுடெல்லி

சமூக ஆர்வலர் ராம்வீர் தன்வர் இவர் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் அளித்த மனுவின் கீழ் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது;-

ஏப்ரல் 2014 முதல் அக்டோபர் 2017 வரை மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மற்றும் வெளிப்புற விளம்பரங்களுக்காக ரூ. 37,54,06,23,616 செலவழிக்கப்பட்டு உள்ளது.

மின்னணு ஊடக விளம்பரங்களில் 1,656 கோடி ரூபாய்க்கு செலவிடபட்டு உள்ளது. சமூக வானொலி, டிஜிட்டல் சினிமா, இண்டர்நெட், எஸ்எம்எஸ் மற்றும் தொலைக்காட்சிகளில் இவ்வாறு செலவிடப்பட்டு உள்ளது. அச்சு ஊடகங்களில் அரசாங்கம் 1,698 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து உள்ளது.

வெளிப்புற விளம்பரங்களான சுவரொட்டிகள், புத்தகங்கள் மற்றும் நாள்காட்டி ஆகியவற்றிற்கு ரூ.399 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டு உள்ளது என கூறப்பட்டு உள்ளது.

சில முக்கிய அமைச்சரகங்கள் மற்றும் அரசின் முக்கிய திட்டங்கள் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்பட்ட வருடாந்திர வரவு செலவுத்திட்டத்திற்கும் மேலாக விளம்பரத்திற்கான செலவழித்த தொகை அதிகமாகும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மாசுதடுப்பு திட்டத்திற்கு அரசாங்கம் ரூ. 56.8 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்து உள்ளது.

2016 ல், தன்வாரால் மத்திய அரசிடம் பெறபட்ட அறியும் உரிமைசட்டத்தின் அறிக்கையில் மத்திய அரசு ஜூன் 1, 2014 மற்றும் ஆகஸ்ட் 31, 2016 க்குள் ₨ 1,100 கோடிக்கு விளம்பரத்திற்காக செலவழிக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டு இருந்தது. அது தொலைக்காட்சி, இணையம் மற்றும் பிற மின்னணு ஊடகங்களுக்கான செலவு மட்டுமே. அதில் அச்சு ஊடகங்கள் மற்றும் வெளிப்புற விளம்பரங்களுக்கான செலவுகள் தெரிவிக்கப்படவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top