மீனவ மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு; ஒட்டுமொத்த தமிழகமும் போராட வேண்டும் – மே பதினேழு இயக்கம்

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி, போராடி வரும் மீனவர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஒக்கி புயலில் சிக்கி குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகி விட்டதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். ”மாயமான மீனவர்களைத் தேடும் பணியை துரிதப்படுத்த வேண்டும். நிவாரணம் தேவையில்லை, குடும்பத்தினர் கரை திரும்ப வேண்டும்” என வலியுறுத்தி, மீனவர்கள் சாலை மறியல் மற்றும் குழித்துறையில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளான இன்றும் குளச்சல் சந்திப்பு மற்றும் மணவாளக்குறிச்சி ஆகிய இரண்டு இடங்களில் மீண்டும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது.

மக்கள் இந்த அரசின் துரோகத்தால் மிகவும் வருத்தத்தோடும் கோவத்தோடும் திரண்டு இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் நூறாண்டும் விழாவில் கலந்து கொள்ள பயணம் செய்யும் நேரம் இருக்கும் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடிபழனிசாமி பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வரவில்லை, துணைமுதல்மைச்சர் பன்னீர்செல்வமும் வரவில்லை, மத்திய அரசு அமைச்சர்கள் இங்கு வரவில்லை, பா.ஜ.கவின் தலைவர்கள் இங்க வரவில்லை, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவில்லை யாரும் போராட்ட காலத்துக்கு வந்து மக்களை சந்ததிகால, இந்த மக்களால் கிடைக்கக்கூடிய வருவாய்மட்டும் மத்திய அரசுக்கு தேவையா இருக்கு ஆனால் மீனவர்கள் தேவை இல்ல.

மக்களுடைய வரிப்பணங்கள் மட்டும் மத்திய அரசுக்கு தேவை ஆனால் மக்கள் தேவையில்லை, ஒட்டுமொத்த இந்தியா பெருங்கடலையும் கண்காணிக்க கூடிய தொழில் நுட்பம் இந்த அரசுக்கு உண்டு, மீனவர்களையும் அவர்கள் கப்பல்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஏமாற்றுவேலை. மீனவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று துல்லியமாக இவர்களால் கண்டுபிடிக்க முடியும் ஆனால் தெரிந்தே கவனமாக தவிர்த்து வருகிறது. தமிழக மீனவர்களை இந்திய அரசு இனப்படுகொலை செய்து வருகிறதா என்ற கேள்விதான் எங்களுக்கு எழுகிகிறது.

காணாமல் போன மீனவர்களை காப்பாற்றி தரவேண்டும் என்ற எல்லையை கோரிக்கையை முன்வைத்து மக்களை போராடிக்கொண்டு இருக்குறார்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் முதல் அமைச்சர்கள் மக்களை நேரில் வந்து சந்திக்கவேண்டும்.

2015-ஆம் ஆண்டு மழை வெள்ளத்தின் போதும் சரி, ஜல்லிக்கட்டில் போதும் சரி மீனவர்கள் மக்களுக்காக நின்றார்கள், அவர்களுக்காக ஒட்டுமொத்த தமிழக மக்களும் போராட வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மீனவர்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top