நிவின் பாலியுடன் மீண்டும் நடிக்க விரும்புகிறேன்: ஷரத்தா ஸ்ரீநாத் விளக்கம்

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘உலிடவரு கண்டந்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடித்துள்ளார் நிவின் பாலி.

கவுதம் ராமசந்திரன் இயக்கியுள்ளார். காஸ்ட் என் குரோவ் நிறுவனம் சார்பில் ஆனந்த் குமார், வினோத் ஷோர்னுர் தயாரித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

எதிர்பார்ப்பை கூட்டியிருக்கும் `ரிச்சி’ படத்தின் விநியோக உரிமையை, ‘விக்ரம் வேதா’, ‘அவள்’, ‘அறம்’ படங்களை வெளியிட்ட `டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

இதில் நடித்தது பற்றி கூறிய ‌ஷரத்தா….

“தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லாத, எந்தவித சினிமா பின்புலமும் இல்லாத எனக்கு இதுவரை சினிமா பயணம் திருப்திகரமாக அமைந்துள்ளது. இயக்குனர் கவுதமுக்காக ‘ரிச்சி’ படத்தை முதலில் ஒப்புக்கொண்டேன். அவரது தொழில் அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது.

நான் சந்தித்துள்ள நடிகர்களில், மிகவும் அர்ப்பணிப்போடும், எந்தவித பந்தாவும் இல்லாமல் மிக எளிமையாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. சக நடிகராகவும், நண்பராகவும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் மறுபடியும் பணிபுரிய ஆவலோடு இருக்கிறேன். இந்த படத்தில் எனது கதாபாத்திரம் பெயர் மேகா. ஒரு பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். தனது கருத்துக்களில் உறுதியான, தான் நம்பும் வி‌ஷயங்களுக்கு போராடும் குணமும் கொண்ட கதாபாத்திரம் இது. ‘ரிச்சி’ படத்தின் கதை சொல்லும் முறை மிகவும் வித்தியாசமானது. இது ஒரு புதுவித சினிமாவாக நிச்சயம் இருக்கும்” என்றார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top