ஜெருசலேம் விவகாரம்: வெடித்தது பாலஸ்தீனத்தில் போராட்டம்; டிரம்புக்கு குவியும் எதிர்ப்புகள்

ரமல்லா:

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.

டிரம்ப்பின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமல்லாது பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், துருக்கி போன்ற ஐரோப்பிய நாடுகளும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. ஒட்டுமொத்த அமைதியை குலைக்கும் அறிவிப்பு இது என பல்வேறு நாட்டு தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், டிரம்ப் தனது முடிவை அறிவித்த சில மணி நேரங்களிலேயே பாலஸ்தீனின் பெத்தலகேம் நகரில் உள்ள பழமையான தேவாலையத்தில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தின் விளக்கை அணைத்து அங்குள்ள கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிரம்ப் புகைப்படத்தை எரித்த அவர்கள், ‘ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் இதயம்’ என்று கோஷங்களை எழுப்பினர். இதேபோல, பாலஸ்தீன தலைவர் யாசிர் அராபாத் அடக்க தலமான ரமல்லா நகரில் திரண்ட பாலஸ்தீனியர்கள் டிரம்ப்புக்கு எதிராக ஆவேச குரல்களை எழுப்பினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top