பாபர் மசூதி இடிப்பை கண்டித்து த.மு.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்; தலைவர்கள் கலந்து கொண்டனர்

புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியாவில் இருந்த மிகப்பழமையான பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கரசேவகர்களால் கூறப்பட்டது. இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய இயக்கங்கள் இதே நாளில் பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்திவருகின்றனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6ம் தேதியான இன்று இசுலாமியர்கள் மற்றும் இடதுசாரிகள் கருப்பு தினமாக அனுசரித்தனர். பாபர் மசூதி இடிப்பைகண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதவாத பயங்கரவாத எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஜனநாயக இயக்கங்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top