டெல்லி டெஸ்ட் டிரா: இலங்கையுடனான தொடரை வென்றது இந்தியா

இந்தியா – இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலியின் இரட்டை செஞ்சுரியின் உதவியுடன் 7 விக்கெட்டுக்கு 536 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 373 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அடுத்து 163 ரன்கள் முன்னிலையுடன் இந்தியாவின் 2–வது இன்னிங்சை இந்தியா துவங்கியது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி தவான் -67 ரன்கள், கோலி 50 ரன்கள், ரோகித் சர்மா 50 ரன்கள் குவித்தாரனர். இந்திய அணி 2–வது இன்னிங்சில் 52.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 410 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணி எதிர்பார்த்தது போலவே இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திண்டாடியது. 4–வது நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 31 ரன்களுடன் தடுமாறிக்கொண்டிருந்தது.

இன்று 5-வது நாள் ஆட்டம் துவங்கியதும், மேத்யூஸ் ஒரு ரன்னில் வெளியேறினார். ஓரளவு தாக்கு பிடித்த சண்டிமால் (36 ரன்கள்) அஷ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ரோஷன் சில்வா, டிக்வெல்லா ஆகியோர் நிலைத்து நின்று ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்து வீச்சாளர்கள் மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

103 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்களை இலங்கை அணி எடுத்து இருந்த போது, டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ரோஷன் சில்வா 154 பந்துகளில் 74 ரன்களும், டிக்வெல்லா 72 பந்துகளில் 44 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top