சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புகிறார் தோனி

புதுடெல்லி:

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் இடம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மீது கடந்த 2015-ஆம் ஆண்டு சூதாட்டப் புகார் எழுந்தது இதன் காரணமாக இரு அணிகளும் இரண்டு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்து சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுத்தது.

இதனால் இரு அணிகளை சேர்ந்த வீரர்கள் வேறு அணிகளில் அடவேண்டியே சூழல் ஏற்பட்டது. அது மட்டும் இன்றி மேலும், குஜராத் மற்றும் புனே என இரண்டு புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த ஆண்டுடன் தடைக்காலம் முடிவடைந்த நிலையில், ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக விளையாடிய தோனியை, ஏலத்தில் எடுக்க பிற அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்க கூடும் என்று கணிக்கப்பட்டது. இந்த நிலையில், ஐபிஎல் நிர்வாக குழு கூட்டத்தில் புதிய திட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கபட்டு உள்ளது.

ஒவ்வொரு அணிகளும் முன்னணி 5 வீரர்களை தக்கவைத்து கொண்டு மற்ற வீரர்களை ஏலத்திற்கு அனுப்பலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தோனி சென்னை அணிக்கு திரும்புவதில் தடை ஏதும் இல்லை என்று தெளிவாகியுள்ளது.

ஒவ்வொரு அணி ஏலத்திற்காக செலவிடும் தொகை 66 கோடி ரூபாயிலிருந்து 80 கோடியாக உயர்த்தியும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் போட்டிக்காக வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top