ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி – ஆஸ்திரியா சுப்ரீம் கோர்ட்டு

வியன்னா:

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடான ஆஸ்திரியாவில் கடந்த 2009-ம் ஆண்டு ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஓரின சேர்க்கை ஜோடி ஆஸ்திரியாவின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. 2019 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வர இருக்கிறது. ஆஸ்திரிய பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர்.

பெண் ஓரின சேர்க்கை ஜோடி ஆஸ்திரியாவின் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை வாதாடிய வழக்கு வழக்கறிஞர் ஹெல்முட் கிராப்னர் கூறுகையில்

ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி அளித்த ஆஸ்திரிய நீதிமன்றத்தை பாராட்டிய அவர் ஓரின சேர்க்கை ஜோடிகளுக்குகான சமத்துவத்தை அங்கீகரிப்பது “அடிப்படை மனித உரிமை” ஆகும் என்று கூறினார்.

ஓரின சேர்க்கையாளர் திருமணம் இப்போது உலகம் முழுவதும் 25 நாடுகளில் சட்டபூர்வமாக உள்ளது.

ஜூன் மாதம் ஆஸ்திரியாவின் பக்கத்துக்கு நாடான ஜெர்மனியம் ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு வாக்களித்தனர்.

உலகிலேயே நெதர்லாந்தில் தான் கடந்த 2001-ம் ஆண்டு ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து பெல்ஜியம், பிரான்ஸ், இங்கிலாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி உள்ளிட்ட 15 ஐரோப்பிய நாடுகளில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி வழங்கின.

அதை முன்னுதாரணம் காட்டி ஆஸ்திரியாவிலும் இத்தகைய திருமணத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் முன்னாள் கம்யூனிச ஐரோப்பிய நாடுகளான பல்கேரியா, போலந்து, ருமேனியா, சுலோவாக்கியா உள்ளிட்ட நாடுகள் அனுமதி அளிக்கவில்லை.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top