ஒக்கி புயல் – பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: கேரள அரசு

திருவனந்தபுரம்:

கடந்த வாரம் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது அதற்கு ஒக்கி புயல் என பேர் இடப்பட்டது. ஒக்கி புயல் குமரி மாவட்டம், கேரளாவின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சேதத்தை உண்டாக்கியது. தற்போது, அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள இந்த புயலினால் மராட்டியம், குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது.

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு புயல் பற்றியன தெளிவான செய்தி சென்று அடையாததால் பலர் புயலில் சிக்கிக்கொள்ள நேர்ந்தது. புயல் பற்றியன முன் எச்சரிக்கை கொடுக்கபததே காரணம் என்று புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகின்றனர்.

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இந்த புயல் காரணமாக காற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டு மராட்டியம், குஜராத் மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இருப்பினும், புயலின் கோர தாக்குதலால் அதிகளவிலான படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நேற்று வரை கேரளாவில் மட்டும் 31 மீனவர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top