சிவகார்த்திகேயனுக்கு என் படம் போட்டியாக இருக்கும் – சந்தானம்

விடிவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விடிவி கணேஷ் தயாரிப்பில் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து உருவாகி இருக்கும் படம் `சக்க போடு போடு ராஜா’. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது.

 

இதில் நடிகர் சந்தானம், நடிகரும், தயாரிப்பாளருமான விடிவி கணேஷ், ரேபோ சங்கர் உள்ளிட்ட படக்குழுவினருடனான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

 

இதில் நிருபர்களின் கேள்விகளுக்கு சந்தானம் பதில் அளிக்கும் போது,

சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டியில்லை, போட்டியாக இருந்தாலும் அது ஆரோக்கியமாகத் தான் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்’ படத்திற்கு தான் `சக்க போடு போடு ராஜா’ படம் போட்டியாக இருக்கும் என்றார். விவேக், ரோபோ சங்கர், விடிவி கணேஷ், மயில்சாமி, பவர் ஸ்டார் சீனிவாசன் என 5 காமெடியன்கள் சேர்ந்த நடித்திருக்கும் இந்த படம் முழு காமெடி விருந்தாகவே இருக்கும்.

 

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் விமர்சனத்துக்கு நாளை நடைபெறும் `சக்க போடு போடு ராஜா’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு பதில் அளிப்பார்.

அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் சந்தானம் தெரிவித்துள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top