ஏமனில் ஹவுத்தி போராளிகள் நடத்திய தாக்குதலில் முன்னாள் அதிபர் பலி

 

ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சாலே ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அங்குள்ள ஹவுத்தி இன மக்கள் ஈரான் நாட்டின் ஆதரவுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக ஏமன் நாட்டு அரசு படையினருக்கும் ஹவுத்தி புரட்சியாளர்களுக்கு இடையே நடந்து வரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஹவுத்தி புரட்சிப் படையினரை விமான தாக்குதல் மூலமாக வேட்டையாடும் பணியில் சவுதி தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக கூட்டுப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டில் தொடங்கிய இந்த உள்நாட்டுப் போரில் 8,670-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் சனாவில் அரசுக்கு எதிராக ஹவுத்தி படையினர் நடத்திய தாக்குதலில் அலி அப்துல்லா சலே கொல்லப்பட்டதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல்லா கொல்லப்பட்டது குறித்து, ஹவுத்தி தலைவர் அப்துல் மாலிக் அல் அவுதி, “எங்களுடைய சிறந்த தருணம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் “காட்டிக்கொடுப்பு மற்றும் துரோகத்தின் சதி தோல்வி அடைந்தது, ஆக்கிரமிப்பு படைகளுக்கு இது கருப்பு நாளாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

ஏமனில் கடந்த வெள்ளிக்கிழமை கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைக்கும் இடையே நடந்த மோதலில்125 பேர் கொல்லப்பட்டனர். 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வந்த அப்துல்லா, சமீபத்தில் சவுதி கூட்டுப் படைக்கு ஆதரவு அளிக்கப் போவதாக தெரிவித்தார். இந்த நிலையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அப்துல்லா கொல்லப்பட்டுள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top