ஜெ.முதலாம் ஆண்டு நினைவஞ்சலி- தடையை மீறி மெரினாவில் கூடிய தொண்டர்கள்

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது. இதை முன்னிட்டு, அதிமுகவினர் அமைதிப் பேரணி சென்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

 

சென்னையில் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ள மெரினா கடற்கரையை நோக்கிச் சென்றனர்.

 

மெரினா கடற்கரையில் ஒன்றுகூடுவது தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்டு வீர மரணம் அடைந்த மாவீரர்களுக்கு ஆண்டுதோறும் மே17 இயக்கம் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம் .இந்த ஆண்டு  கடந்த மே மாதம் 21 ந்தேதி நடக்கவிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை இதே எடப்பாடி அரசு மெரினாவில் ஒன்று கூடி நினைவேந்தல் நடத்தக்கூடாது என்று தடை விதித்தது. இது குறித்து சென்னை உதவி ஆணையாளர் எந்த அமைப்புக்கும் ,கட்சிக்கும் இங்கு ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. எந்நேரமும் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது. என்றார்.

 

ஆனால்,ஆளும் கட்சி அணியான அதிமுக விற்கு எந்த சட்டத்தின் அடிப்படையின் அனுமதி கொடுக்கப்பட்டது? ஊர்வலம் நடத்தப்பட்டிருக்கிறது,ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு வேறு நடந்திருக்கிறது. சட்ட ஒழுங்கை பாதுகாப்பதாக சொல்லும் காவல்துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.வழக்கு பதிவு செய்யப்பட்டதா? அமைதியான முறையில் மெழுகுவர்த்தி ஏந்தியதற்கு ‘குண்டர் சட்டம்’  பாய்ந்தது,இப்போது அடிதடி, தள்ளுமுள்ளு நடந்திருக்கிறது என்ன வழக்கு போடப்பட்டிருக்கிறது?

 

ஆளும் கட்சி என்றால் எதைவேண்டுமானாலும் செய்வார்களா.?அப்படியானால்   மற்ற அமைப்புகளுக்கும் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நடத்த அனுமதி அளிக்குமா இந்த காவல்துறை? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top