2ஜி வழக்கு; டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு – சிறப்பு நீதிமன்றம்

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டு, முன்னாள் தொலை தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் மீது குற்றம் சட்டப்பட்டனர். இதையடுத்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ 2 வழக்குகளை தொடுத்தது.

முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான, 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு மீதான இறுதி வாதம் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி முடிந்ததையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு தயாராக காலதாமதம் ஆனதால் தீர்ப்பு தேதி டிசம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தீர்ப்பு தேதியை அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ”2ஜி அலைக்கற்றை வழக்கில் டிசம்பர் 21ம் தேதி காலை 10 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும்” என தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top