சென்னைக்கு புயல் ஆபத்து இல்லை. ஆனால் மழை வரும்; தமிழ்நாடு வெதர்மேன்

 

சென்னைக்கு புயல் ஆபத்து இல்லை. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது, ஆனால் மழை வரும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறினார்.

 

இதனால், தமிழகத்துக்கு பாதிப்பும் இல்லை. அதிகமாக பரபரப்பு ஏற்படுத்தியது எல்லாம் வீணாகிவிட்டது என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

 

”வங்கக்கடலில் உள்ள சூழல் புயல் உருவாவதற்கு எதிராகவே இருக்கிறது. இப்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாகக் கூட வலுப்பெறலாம். ஆனால், புயலாக மாறுமா என்பதே சந்தேகம். அதுமட்டுமல்ல, நம் தமிழகத்துக்கு அருகே வருமா என்பது கூட சந்தேகம்தான்

 

வங்கக்கடலில் அதிகமாக உருவாகி இருக்கும் மேகக்கூட்டங்கள், மறு நாளே கலைந்துவிடலாம். ஆனால் எந்த மேகக்கூட்டமும் அவ்வளவு எளிதாக கலைந்துவிடாது.

 

மீனவர்கள் கடலுக்குள் செல்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வடக்கு தமிழக கடற்கரை, ஆந்திரா கடற்பகுதிகுள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

 

நம்முடைய இந்திய வானிலை மையம் புயல் குறித்த கண்ணோட்டத்தை, கணிப்பை இன்று அல்லது நாளை மாற்றிக்கூறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதிரிகளில் தமிழகத்துக்கு இந்த காற்றழுத்த தாழ்வுபகுதியால், அதிகமான மழை இல்லை என்பது தெரிந்துவிட்டது.

 

தமிழகத்தைப் பொறுத்தவரை லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு உண்டு” தற்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக மாறினாலும் ஆந்திர மாநிலம் நோக்கி நகர்ந்துவிடும். மேலும், சாதகமான சூழல் இல்லாததால், அது வலுவிழக்கக் கூடும். என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top