டெல்லி டெஸ்ட்: 4-வது நாள் ஆட்டம் 373 ரன்களுக்கு இலங்கை ஆல்அவுட்

இந்தியா – இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 57 ரன்னுடனும், சண்டிமல் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

3-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது, மேத்யூஸ், சண்டிமல் ஆகியோர் நிலைத்து நின்று விளையாடினார்கள். ஆடுகளம் ரன் குவிப்பதற்கு சாதகமாக இருந்ததால் அஸ்வின், ஜடேஜா சுழற்பந்து வீச்சை இருவரும் எளிதாக எதிர்கொண்டு விளையாடினார்கள்.

இலங்கை அணி 76.4 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது. மேத்யூஸ் 231 பந்தில் 13 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய மேத்யூஸ் 111 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து சமரவிக்ரமா களம் இறங்கினார்.

தேனீர் இடைவேளைக்கு பிறகு சண்டிமல் மேலும் இரண்டு ரன்கள் எடுத்து தனது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் விளையாடிய சமரவிக்ரமா 33 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த சில்வா, டிக்வெல்லா ஆகியோரை அடுத்தடுத்து டக்அவுட்டில் வெளியேற்றினார் அஸ்வின்.

அதன் பின் இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் லக்மலை 5 ரன்னில் மொகமது ஷமியும், காமகேயை 1 ரன்னிலும் ஜடேஜா வெளியேற்ற 3-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் சேர்த்தது.

இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது இலங்கை வீரர் சண்டிமல் 164 ரன்கள் குவித்து இருந்த நிலையில் தவான் பந்து வீச்சில் ஆடம்மிழந்தார். 373 ரன்களுக்கு இலங்கை அணி ஆல்அவுட் ஆனது.

இந்தியா தற்போது தனது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்திய ஆணி 163 ரன்கள் பெற்று முன்னிலையில் உள்ளது. மத்திய இடைவெளியில் இந்தியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top