அமெரிக்கா – தென்கொரிய போர் பயிற்சி; அணுஆயுதப் போர் எந்நேரத்திலும் வெடிக்கலாம்

அணுஆயுதப் போர் எந்த நேரத்திலும் தொடங்கும் என்று வடகொரிய ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது.

சர்வதேச விதிமுறைகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. தென்கொரியாவையும் அதற்கு ஆதரவாக உள்ள அமெரிக்காவையும் தரைமட்டமாக்கி விடுவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், வடகொரிய அச்சுறுத்தலை சமாளிக்க, தென்கொரியா, ஜப்பான், அமெரிக்க விமானப் படை வீரர்கள் கொரிய தீபகற்பப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரிய தீபகற்ப பகுதியில் தென் கொரியா, அமெரிக்கா போர் பயிற்சிகளை தொடர்ந்து வந்த நிலையில், வடகொரியா எத்தனை எதிர்த்து. தென்கொரியா தொடர்ந்து அமெரிக்காவுக்கு ஆதரவு அளித்துவருவது கொரியா பிராந்தியத்திற்கு அழிவை உண்டாகும் என்று வடகொரியா கூறியது இதை தொடர்ந்து அணுஆயுத போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்று வடகொரிய ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

வடகொரிய – தென்கொரிய எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருவதையடுத்து அங்கிருக்கும் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களின் குடும்பங்களை தென் கொரியாவிலிருந்து வெளியேறச் சொல்லி அமெரிக்கா கூறியுள்ளது.

இதுகுறித்து குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்ஸே கிரஹாம் கூறும்போது, “கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க வீரர்களின் குடும்பங்கள் தென்கொரியாவில் தங்கி இருப்பது சரியானது அல்ல” என்று கூறியுள்ளார்.

ஆனால் இன்று காலை திங்களன்று அமெரிக்கா மற்றும் தென் கொரியா, பெரிய அளவிலான கூட்டு வான்வழி பயிற்சிகளை மேற்கொண்டன. கடற்படை மற்றும் கடற்படை சேவை உறுப்பினர்கள் உட்பட சுமார் 12,000 அமெரிக்க வீரர்கள் தென் கொரிய துருப்புக்களில் சேரும் என்று கூறப்பட்டுள்ளது.

வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்குப் பின்னர் வட கொரியா மீது கூடுதல் பெரிய தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் கடந்த வாரம் தெரிவித்தார்.

தென்கொரியாவில் 28,500 துருப்புக்கள் கொண்டுள்ள அமெரிக்கா, 1950-53 கொரியப் போரின் பொது மேற்கொண்ட விதிமுறைகளை அமெரிக்கா மீறிவருகிறது. கொரியாவை ஆக்கிரமிப்பதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டங்களில் இருந்து எங்களை பாதுகாத்துக்கொள்ள எங்களின் ஆயுதத் திட்டங்கள் ஒரு அவசியமான பாதுகாப்பு என்று கூறியுள்ளது வடகொரியா.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top