சிரியாவில் வான்வழித் தாக்குதல்: 17 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி

டமாஸ்கஸ்,

சிரியாவின் டமாஸ்கஸ் நகர் அருகே சிரிய மற்றும் ரஷ்ய ஜெட் விமானங்கள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. இதில் ஹமோரியா நகரில் மக்கள் அதிகம் கூடும் சந்தை பகுதி மற்றும் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள் தாக்குதலுக்கு இலக்காகின. இந்த சம்பவத்தில் குழந்தைகள் 17 பேர் உட்பட 25 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சிரியாவை கண்காணித்து வரும் இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறும்போது,

‘சிரியாவில் டமாஸ்கஸ் நகரில் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமிப்புப் பகுதியில் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் குழந்தைகள் 17 பேர் உட்பட 25 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அர்பீன், ஹரசதா ஆகிய சிரியாவின் பிற நகரங்களில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பொது மக்கள் 8 பேர் பலியாகினர்.

சிரியாவின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 21 குழந்தைகள் உட்பட 53 பேர் பலியாகினர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. இதில் இதுவரை 3,40,000 பேர் பலியாகியுள்ளனர்’என்று தெரிவித்துள்ளது.

இதுபற்றி ஹமோரியா பகுதியில் வசித்து வரும் சாதிக் இப்ராகிம் என்பவர் கூறும்பொழுது, பொதுமக்களே தாக்குதலுக்கு இலக்காகின்றனர். ஒரு ஜெட் விமானம் எங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அது வன்முறையாளர்களையோ அல்லது சோதனை சாவடி பகுதிகள் மீதோ தாக்குதல் நடத்தவில்லை என கூறியுள்ளார்.

சிரிய மற்றும் ரஷ்யா அரசாங்கம் இதனை மறுத்துள்ளது, தங்களது ஜெட் விமானங்கள் பொதுமக்கள் மீது குண்டுகளை வீசவில்லை என்றும் தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளையே தாக்கினோம் என்றும் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top