இனி விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன்: சிவகார்த்திகேயன்

24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் வேலைக்காரன். நயன்தாராவுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் `வேலைக்காரன்’ படக்குழுவினர் மோகன் ராஜா, ஆர்.டி.ராஜா, சிவகார்த்திகேயன், அனிருத், ரோபோ ஷங்கர், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, காளி வெங்கட், மன்சூர் அலிகான், விஜய் வசந்த், கலை இயக்குனர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் ராம்ஜி உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.

இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:

தனி ஒருவன் படத்தை பார்த்ததும் டைரக்டரிடம் போனில் பேசினேன். இதுபோல் மிகவும் வலுவான கதை செய்யவேண்டும் என விரும்புவதாக கூறினேன். எனவே, மோகன் ராஜாவை நேரில் போய் பார்த்தேன். அவரும் என்னுடன் படம் செய்வதற்கு ஒப்புதல் தந்தார்.

இருவரும் சேர்ந்து அப்போதே வேலைக்காரன் என தலைப்பையும் தேர்வு செய்தோம். இந்த படத்தில் முழுக்க முழுக்க என்ன கிடைத்தாலும் இந்த பெருமை மோகன் ராஜாவையே சேரும்.

மேலும், மலையாள நடிகர் பகத் பாசில் ஒரு சிறந்த நடிகர். அவருடன் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷம். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.

நயன்தாராவுடன் முதல் முறையாக நடித்துள்ளேன். ஏகன் படத்தில் தான் முதலில் அவரை பார்த்தேன். நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது தான் அவரது வெற்றிக்கான காரணம்.

அனிருத் இல்லையென்றால் சிவகார்த்திகேயன் இல்லை என டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பார்த்து வருகிறேன். அந்த கருத்தில் எனக்கு பெருமை தான். எனது வாழ்க்கையில் பாதிக்கு மேல் உங்களுக்கு கொடுத்துள்ளேன், உங்களுக்கு இது 15-வது படம். ஆனால், இது எனக்கு 11வ-து படம்.

இந்த படத்துக்கு உழைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

இனி விளம்பரங்களில் நான் நடிக்க மாட்டேன். ஏனெனில் நான் நடிக்கும் விளம்பரங்கள் மூலம் சிறு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவு.

என்னை நல்ல மனிதனாக மாற்றிய படம் இது. அடித்தட்டு மக்களின் கேள்விகள், ஆசைகள் நடக்குமா என்பதை விளக்குவதே இந்த படம். இந்த படத்துக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.

இந்த படத்தில் வரும் பாடலின் வரிகளில், ஒரு முறையே வாழும் வாழ்க்கை, அதை பயனுறதாக்கு என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை.

இவ்வாறு அவர் பேசினார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top