‘ஒக்கி’ புயல் – லட்சத்தீவுகளில் கடுமையான சேதம்

கன்னியாகுமரி மற்றும் கேரளா மாநிலத்தை தாக்கி பெரும் அழிவை உருவாக்கிய ஒக்கி புயல், தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவை நோக்கி நகர்ந்தது.

லட்சத்தீவை தாக்கிய ஒக்கி புயல் அங்கும் பெரும் சேதத்தை உருவாகியுள்ளது. லட்சத்தீவு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தேசியவாத காங்கிரஸ் முகமது பைசல் கூறுகையில்:-

“லட்சத்தீவுகளில் மினிகாய், கல்பேனி, கவரட்டி தீவுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. அங்கு இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் விழுந்துள்ளன. கவரட்டியில் கடல் தண்ணீரை குடிநீராக்கும் ஆலை பாதித்துள்ளது. மொத்தத்தில் ரூ.500 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கு இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

“விவசாயிகளுக்கு மழையாலும், சூறாவளி காற்றாலும் பெருத்த பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். படகு போக்குவரத்து முடங்கிப்போய் உள்ளது. சுமார் 10 படகுகள் மூழ்கி உள்ளன” என்றும் அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top