ஹாக்கி உலக லீக் பைனல்: இங்கிலாந்திடம் போராடி தோற்றது இந்தியா

புவனேஷ்வர்:

உலக ஹாக்கி லீக் பைனலில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா போராடி தோல்வி அடைந்தது.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி பைனல்ஸ் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. இந்நிலையில் நேற்று 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதியது.

முதல் கால் பகுதியில் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.குட்பீல்டு டேவிட் 25வது நிமிடத்தில் ஒரு கோலும், வார்டு சாம் 43 வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

47-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.இதில் ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்து அசத்தினார். அடுத்த 3-வது நிமிடத்தில் ரூபிந்தர் பால் சிங் பீல்டு கோல் அடிக்க ஆட்டம் 2-2 என சமநிலையை அடைந்தது.

57-வது நிமிடத்தில் சேம் வார்டு மீண்டும் கோல் அடிக்க இங்கிலாந்து 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top