லண்டனில் அதிகரித்து வரும் ‘ஆசிட்’ வீச்சு; கடந்த ஆண்டில் மட்டும் 454 பேர் மீது ‘ஆசிட்’ வீச்சு

லண்டன்:

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆயுதங்களால் நடத்தப்படும் தாக்குதல்களை விட ‘ஆசிட்’ வீச்சு சாதாரணமாகி வருகிறது.

இங்கு பணம் கொள்ளையடிக்க அவரது உடலில் ஆசிட் வீசப்படுகிறது. இதனால் பலர் தங்களது முக அழகையும், கண்பார்வையையும் இழந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் மட்டும் 454 ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. அதேபோன்று 2015-ம் ஆண்டில் 261 பேரும், 2014-ம் ஆண்டில் 166 பேரும் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிட் வீச்சு சர்வ சாதாரணமாக நடைபெறுவதால் லண்டன் வீதிகளில் பொதுமக்கள் சுதந்திரமாக நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். கொள்ளை மற்றும் திருட்டுகள் நடப்பதற்கான காரணத்தை கண்டு அறியப்படாவிட்டால் இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதற்கு ஆசிட் வகைகள் எளிதாக கிடைப்பதுவே காரணம் என கூறப்படுகிறது. எனவே ஆசிட் விற்பனை செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top