கடலுக்குச் சென்ற மீனவர்கள் நிலை என்ன? தகவல்களை தரமறுக்கும் தமிழக அரசு;மீனவர்கள் சாலைமறியல்

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் அடித்த ‘ஓகி’ புயலில் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தான  தகவல்களோ,அவர்களுக்கான நிவாரணமோ எதை பற்றியும்  மாநிலஅரசு மக்களுக்கு தெரிவிக்கவில்லை.மாநில அரசு இயங்குகிறதா என்று தெரியவில்லை

 

கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது மட்டுமல்லாமல் தந்தி கம்பம்களையும் பெரிய மரங்களையும் சாய்த்து சென்று விட்டது

 

.
புயல், மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மரங்கள்  சாய்ந்தன. ஒகி புயல் தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவை நோக்கி நகர்ந்ததால் தென் மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து நீங்கியது.

இந்த புயலில் பல்லாயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் அவற்றை சீரமைக்கும் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாததால்.போக்குவரத்துகள் இன்னும் பாதிக்கப்பட்ட நிலையிலே இருக்கிறது.

 

அதே நேரத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொடர்பான தெளிவான தகவல் எதுவும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்படாதது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆனால், அருகே இருக்கும் மாநிலமான கேரளாவில்  மாநில முதல்வர் தொடர்ந்து மீட்கப்பட்ட மீனவர்கள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்து வருகிறார். எத்தனை மீனவர்கள் காணமல் போயியிருக்கிறார்கள். எவ்வளவு பேர் திருப்பி வந்திருக்கிறார்கள் என கணக்கெடுத்து.மீட்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்.

ஆனால், தமிழக அரசு எத்தனை பேர் மீன்பிடிக்க போனார்கள்? எத்தனை பேர் எங்கெங்கே கரை ஒதுங்கியுள்ளனர்? எஞ்சிய மீனவர்கள் நிலைதான் என்ன? என்பது குறித்து எந்த ஒரு தெளிவான தகவலையும் தெரிவிக்கவில்லை. இது மீனவர்களின் உறவினர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

குளச்சல், விழிஞம் கடற்பரப்பில் மீனவர்களின் உடல்கள் ஒதுங்கியதாகவும் அது கேரளா மீனவர்களின் உடல்களா இல்லை தமிழ் மீனவர்களின் உடல்களா  எனத் தெரியவில்லை இதை அரசுதான் கண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். எங்கள் மாவட்டத்திற்கு ஒரு மத்திய அமைசர் இருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் வருந்ததக்கது என்று சமூக ஆர்வலர்களும் மீனவர்களும் தொடர்ந்து பேசிவருகிறார்கள்.

 

“இயற்கை சீற்றத்தில் சிக்கி உறவுகளை காணாமல் தவிப்போருக்கு தெளிவான தகவல் தந்து ஆறுதல் தர வேண்டியது தமிழக அரசின் கடமை.அதை சரிவர செய்யாத தமிழக அரசை கண்டித்து மீனவர்கள்  சாலையில் ஒன்று கூடி போராட்டம் செய்ய தொடங்கி விட்டனர்.கடந்த இரண்டு நாட்களாக  சாலை மறியல் நடந்துகொண்டிருக்கிறது,ஆனால், இங்கு செய்திகளில் ஆர்கே நகரில் விஷால் போட்டிபோடுவதை மட்டுமே மக்களுக்கு காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.எங்கள் செய்தி மீடியாவில் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. அதற்கு பின்னால் அரசு இருக்கிறது” என்று மீனவர் ஒருவர் பேசினார்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  2000 க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்டு விட்டதாக பொய் சொல்கிறார். “கடலுக்கு சென்ற எங்கள் சகோதரர்கள் இன்னும் திரும்பவில்லை எங்கே மீட்டுவிட்டோம் என்று சொல்கிற நிர்மலா சீதாராமன் கான்பிக்கச்சொல்லுங்கள் பார்ப்போம்” என்று ஒரு சகோதரி பேசுவது மனதை தைக்கிறது.

 

கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்திற்கே  குடிநீர் இல்லாமல் தவிக்கிறது கன்னியாகுமரி மாவட்டம். மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிபடுகிறார்கள்.ஆனால் அரசு இதை எதையும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு அரசு  நடவடிக்கை எடுக்குமா? இல்லை நீதிமன்ற துணைக்கொண்டு மீனவர்கள் போராடக்கூடாது என சொல்லி போராட்டத்தை செவிலியர் போராட்டம் போல நீர்த்துபோகச்செய்யுமா?      ,
 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top