சாதனை படைத்த ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிடி வார்’ ட்ரெய்லர்

சூப்பர் ஹீரோக்கள் பட வரிசையில் பாக்ஸ் ஆஃபிஸில் முன்னணி வகிப்பது மார்வல். மார்வல் காமிக்ஸின் முக்கியமான சூப்பர்ஹீரோக்கள் பலர் இணையும் ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிடி வார்’ படத்தின் ட்ரெய்லர் புதன்கிழமை வெளியானது.

வெளியான 24 மணி நேரத்தில் 23 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன், ‘இட்’ திரைப்பட ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் 19 கோடி முறை பார்க்கப்பட்டதே சாதனையாயிருந்தது தற்போது அந்தச் சாதனையை உடைத்து அவெஞ்சர்ஸ் முன்னிலை பெற்றுள்ளது.

இதன்முலம் மார்வல் என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிடி வார் படத்தின் ட்ரெய்லர், யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட ட்ரெய்லர் என்ற சாதனையை படைத்துள்ளது.படம் மே 4, 2018 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top