இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவிக்க ட்ரம்ப் முடிவு – பாலஸ்தீனர்கள் கண்டனம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்குப் பயணித்தார்.

அப்பயணத்தில் “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நல்ல நட்புறவு நீடிக்கிறது. இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் அமைதி ஏற்பட தற்போது ஏதுவான சூழல் உருவாகியுள்ளது” என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் மீது ஆக்கிரமிப்பு செய்து வரும் இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்று பாலஸ்தீனர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் ஜெருசலேம் தொடர்பான அமைதி பேச்சு வார்த்தை முயற்சியில் ட்ரம்ப் இறங்கினார்.

இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக, அதிபர் ட்ரம்ப் அடுத்த வாரம் அறிவிக்கக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையே பெரும் அரசியல் விளைவை ஏற்படுத்தும் என்று பாலஸ்தீன அரசியல் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top