மீண்டும் இணைகிறார்கள் நயந்தாரா – விஜய்சேதுபதி

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லராக உருவாகி வரும் படம் `இமைக்கா நொடிகள்’. இந்த படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். அதர்வாவின் அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

விஜய் சேதுபதி – நயன்தாரா ஜோடி ஏற்கனவே ‘நானும் ரவுடி தான்’ படத்தின் மூலம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த ஜோடி ‘இமைக்கா நொடிகள்’ படத்திலும் இணைந்திருக்கிறது. அதற்காக விஜய் சேதுபதி தனது படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் தொடங்கப்படவுள்ளது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாக இருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top