டெல்லி டெஸ்ட்: விராட் கோலி இரட்டை சதம், 457 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா

டெல்லி:

இந்தியா – இலங்கை இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 156 ரன்னுடனும், ரோகித் சர்மா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பொறுமையாக விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த ஜோடியை பிரிக்க இலங்கை பந்துவீச்சாளர்கள் கடும் முயற்சி எடுத்து வருகிறது. ஆட்டத்தின் 108 வது ஓவரில் விராட் கோலி 238 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார்.

இதுவரை அவர் 6 முறை இரட்டை சதங்கள் அடித்து இருக்கிறார். இந்த ஆண்டில் இது அவரது மூன்றாவது இரட்டை சதமாகும். ஏற்கனவே, கொல்கத்தா மற்றும் நாக்பூர் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி சதம் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறு முனையில் ரோகித் சர்மா 41 ரன்கள் எடுக்க, இந்திய அணி 457 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

முன்னதாக, மே.இ தீவுகள் அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்த லாரா 5 முறை இரட்டை சதம் அடித்ததே சாதனையாக இருந்த நிலையில் அந்த சாதனையை இந்தியாவின் டெஸ்ட் கேப்டனான விராட் கோலி முறியடித்து உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top