இடைத்தேர்தலில் நடிகர் விஷால்;கமலின் ஒத்திகை களமாகிறது ஆர்.கே.நகர் தொகுதி

செய்திக்கட்டுரை

 

சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதியதல்ல,ஆனால் இன்றைய சூழலில் நடிகர்கள் அரசியல் களத்திற்கு வருவது  மக்களுக்காக அல்ல தங்களுடைய சொத்தை பாதுகாக்கவும் சினிமாவில் மார்க்கெட் போனபின்பு மக்கள் மத்தியில் ஒரு மாஸ் இருக்கவேணும் என்ற அடிப்படையிலே சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்பது இன்றைய இளைஞர்களுக்கு புரிந்து விட்டது. ஆகையால்தான் சுப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே தமிழக மக்களின் சமூக மனநிலை குறித்து ஆழ்ந்து யோசித்து அரசியலுக்கு வர கடுமையாக யோசிக்கிறார்.

கமலஹாசனுக்கு பின்னால் பாஜக வின் ஆதரவு இருப்பது அவர் “கருப்புக்கு உள்ளே காவி இருக்கிறது” என்று சொல்லும் போதே தெளிவாகி விட்டது

 

இப்போது திடீரென  சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் களம் இறங்குவது சர்சைக்குள்ளானாலும்,அவருக்கு பின்னே பாஜக இருப்பது இலை மறைவு காயாக இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

 

அடுத்த பொது தேர்தலில் ‘திராவிட முன்னேற்ற கழகம்’ பெருவாரிய இடத்தை கைப்பற்றும் என்பது வெட்டவெளிச்சமான உண்மை.ஏனென்றால் அதிமுகவின் ஆட்சியில் தமிழக மக்கள் ஒரு அருவருப்பை உணர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது எல்லோரும் அறிந்தது. அந்த அருவருப்புக்கு பின்னே பாஜக இருப்பது அனைவரும் அறிந்ததே! இந்த சூழலில்  அடுத்து வரும் பொதுத்தேர்தலில் திமுக விற்கு விழக்கூடிய ஓட்டை பிரிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.அதற்கு ஒரே வழி சினிமாக்காரர்கள்தான்,ரஜினி அரசியலுக்கு வராத நிலையில் அதற்கு மாற்றாக கமலை இறக்குவோம் என்றுதான் பாஜக நினைத்து செயல் படுத்திய திட்டம்தான் கமலின் அரசியல் பிரவேசம்.

 

 

அவர் கட்சி கட்டி அடுத்த தேர்தலில் நிற்கும் போது அவர் திமுகவின் ஓட்டையே பிரிப்பார். அதற்கு முன்னோட்டமாக  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலை களம் இறக்கி விடுவது என்று கமல் யோசிக்க பாஜகவின் தயவில் அது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. நடிகர் விஷாலை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் நடிகர் சங்க தேர்தலிலும் சரி தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலிலும் சரி விஷால் வெற்றிப்பெற காரணமாக இருந்தவர் கமல்ஹாசன் அவர்கள்.இப்போது விஷால் கமலுக்கு நன்றிகடன் பட்டிருக்கிறார்.ஆக, அடுத்த பொது தேர்தலுக்கான ஒத்திகையை பார்க்க ஆர்கே நகர் தொகுதியை கமல் தேர்வு செய்து இருக்கிறார். ஆமாம் கமலின் கருப்புக்குள்ளே காவி ஒளிந்து உள்ளது என்பதை இப்படிதான் புரிந்துகொள்ள வேண்டும்.

 

இதுகுறித்து  பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் குருத்து சொல்லும்போது

“எங்களை பொறுத்தமட்டில் பா.ஜ.க.வுக்கு என்று இருக்கின்ற ஆதரவு எப்போதும் நிலைத்து இருக்கும்.

ஒருவேளை, விஷால் முயற்சி மாநில அரசுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்வதாக இருக்குமானால், அதனால் பாதிக்கப்படப்போவது தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தான். அவர்கள் தான் கவலைப்படவேண்டும்” என்றார்.ஆக ,விஷாலுக்கு பின்னே பாஜக என்பது தெளிவாகிறது.

 

சேவற்கொடியோன்

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top