திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்ற “அருவி” படத்தின் ரிலீஸ் தேதி

 

டிரீம் வாடிரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அருவி’. திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் `தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை தொடர்ந்து டிரீம் வாரியார் பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளார்.

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதீதி பாலன் நாயகியாக நடித்திருக்கிறார். அனைவருக்கும் பொருந்தும் சமூக – அரசியல் படமாக ‘அருவி’ உருவாகி இருக்கிறது. முகமது அலி பாய்க் என்ற ஐதராபாத் தியேட்டர் ஆர்டிஸ்ட், திருநங்கை அஞ்சலி வரதன், கன்னட நடிகை லட்சுமி கோபால் சாமி, மதன் உள்பட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு பிந்து மேனன் இசையமைத்திருக்கிறார்.

ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிரலயில், படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களைப் பெற்ற இந்த படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top