புளூட்டோ கிரகத்தில் திரவ நீர் கண்டுபிடிப்பு: நாசா

வாஷிங்டன்:

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் வேற்று கிரகவாசிகள் குறித்த ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள புளூட்டோ உள்ளிட்ட பனிக்கட்டி கிரகங்களில் தண்ணீர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

புளூட்டோ கிரகத்தின் அடிப்பகுதியில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீர் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதே போன்று நெப்டியூன் கிரகத்திலும் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும், ‘நாசா’ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அவை டிரான்ஸ்-நெப்டியூன் பொருள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன, அவற்றின் மேற்பரப்பு திரவ நீரைக் கொண்டிருக்கும் மிகவும் குளிராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

புளூட்டோ மற்றும் நெப்டியூன் கிரகங்களில் துணை கிரகங்களின் புவியீர்ப்பு விசை சக்தியால் ஒன்றுடன் ஒன்று மோதி வெப்பம் ஏற்பட்டு அதில் உள்ள ஐஸ்கட்டிகள் உருகி கடல் போன்று தண்ணீர் உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்பு உயிரனங்கள் வாழ கூடிய சத்யகுருகளை தேடுவதற்கு கூடுதல் நிலப்பரப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை பெரிதும் விரிவுபடுத்துவதற்கு உதவியாக அமைந்துள்ளது.

தண்ணீர் இருப்பதால் அங்கு உயிரினங்கள் வாழும் சாத்தியகூறுகள் இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top