அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பிரதமர் மோடி திடீர் சந்திப்பு

 

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

 

பிரபல ஆங்கில ஊடகமான இந்துஸ்தான் டைம்ஸ் நடத்தும் தலைமையாளர்கள் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா புதுடெல்லி வந்துள்ளார்.

 

அந்நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா, தனது அதிபர் பதவி காலத்தில் இருமுறை இந்தியாவுக்கு வந்ததை நினைவு கூர்ந்தார். இந்தியர்களாக தங்களை அறிவித்துகொண்ட முஸ்லிம்களை இந்தியா பராமரித்து, செழிப்பூட்ட வேண்டும் என கேட்டு கொண்டார்.

 

பின்னர், டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு சென்ற ஒபாமா அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

 

இதுதொடர்பாக, தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவை மீண்டும் ஒருமுறை சந்தித்துப் பேசியதிலும், ஒபாமா பவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலம் இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்தும் அவரது புதிய முயற்சிகளை அறிந்து கொள்வதிலும் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

பிரதமர் மோடி தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளித்த ஒபாமா, இந்திய பிரதமர்களில் எனக்கு மோடியை பிடிக்கும். ஆனால், இந்திய பொருளாதாரத்தை நவீனப்படுத்திய மன்மோகன் சிங்கின் தீவிர விசிறி நான் என பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் எதிர்காலம் பற்றி பிரதமர் மோடிக்கு ஒரு தொலைநோக்கு பார்வையும், கண்ணோட்டமும் உள்ளது. பல வகைகளில் பலவற்றை அவர் நவீனப்படுத்தி வருகிறார். இந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயக நாடுகள் என்பதால் இந்தியாவில் ஆட்சியமைத்த கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது என்னுடைய கடமையாக இருந்தது.

மோடியும், மன்மோகன் சிங்கும் என்னிடம் நேர்மையாக நடந்து கொண்டனர். இருவரின் பதவிக்காலத்திலும் இந்தியா – அமெரிக்கா இடையிலான நல்லுறவு மேலும் வலுவடைந்தது.

நாட்டுக்காக இருவருமே கடுமையான முடிவுகளை எடுத்தனர். மோடியை எனக்கு பிடிக்கும். ஆனால், தனது பதவிக்காலத்தில் மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக அன்னிய முதலீட்டுக்கான வாசலை திறந்தார். இது மிகவும் முக்கியமான முடிவாகும். இதற்கு துணிச்சல் தேவை என்று ஒபாமா தெரிவித்தார்

 

ஒரு இளவரசிக்கு கொடுக்கும் மரியாதை போல அமெரிக்க  அதிபர் ட்ரம்ப்பின் மகள் இவாங்கோக்கு மோடி கொடுத்த வரவேற்பு இன்னும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிற செய்தியாகவே இருக்கிறது, இந்த நிலையில் திடீரென ஒபாமாவை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top