உ.பி.யில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை – முதல் மந்திரி விசாரணைக்கு உத்தரவு

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மர்ம நபர்களால் பத்திரிகையாளர் சுட்டு கொலை. உரிய விசாரணை நடத்த வேண்டும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவு.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பிலாஹுர் பகுதியை சேர்ந்தவர் நவின் குப்தா (30). இந்தி தினசரி பத்திரிகையில் வேலை செய்து வரும் இவர் நேற்று காலை அங்குள்ள பொது கழிப்பிடத்துக்கு சென்றார். அங்கிருந்து வெளியே வந்த நவின் குப்தாவை அடையாளம் தெரியாத நபர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கைகளில் இருந்த துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டனர்.

இதில் நவின் குப்தா குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதைக்கண்ட அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். நவீன் குப்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பத்திரிகையாளர் சுட்டு கொல்லப்பட்டதை அறிந்ததும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், குப்தாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும், பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்ப்பட்ட விவாகாரம் தொடர்பாக விரைந்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சில மாதங்களுக்கு முன்னர் இதே போன்று அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார் எது குறித்து மத்தியில் உள்ள ப.ஜெ.கவை சேர்ந்த பிரதமர் மோடி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் பலர் குற்றம் சாட்டினார். இதை
தொடர்ந்து நேற்று பத்திரிகையாளர் நவீன் குப்தா கொல்லப்பட்டுள்ளார்.பத்திரிகையாளர்களின் தொடர் கொள்ளைகள் கருது உரிமைக்கு எதிரானதாக பார்க்க படுகிறது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top