உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு

அமெரிக்காவில் உள்ள அனாஹெய்மில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார்.

இந்திய ரயில்வேயில் பணிப்புரியும் மீராபாய் சானு, ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 109 கிலோ எடையையும் தூக்கி 48 கிலோ உடல் எடைப்பிரிவில் மொத்தம் 194 கிலோ எடைதூக்கி தங்கம் வென்றதோடு புதிய தேசிய சாதனையையும் படைத்தார்.

ஒலிம்பிக் வெண்கலப்பதக்க வீராங்கனை கர்னம் மல்லேஸ்வரி உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 1994 மற்றும் 1995-ம் ஆண்டில் முதல் பரிசை வென்றார்.

அதன்பிறகு ஆன்ஹெய்மில் சானு தங்கம் வென்று சாதனை படைத்து, தனது ரியோ ஒலிம்பிக் ஏமாற்றத்திலிருந்து மீண்டு வந்துள்ளார்.

தாய்லாந்தின் சுக்கரோன் துன்யா 193 கிலோ எடைதூக்கி வெள்ளிப்பதக்கமும், செகுரா அனா ஐரிஸ் 182 கிலோ எடைத்தூக்கி வெண்கலமும் வென்றனர்.

இந்தத் தொடரில் ஊக்கமருந்து விவகாரம் காரணமாக உலகின் தலைசிறந்த பளுதூக்கும் வீராங்கனைகளைக் கொண்ட ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், உக்ரைன், அஜர்பெய்ஜான் ஆகிய நாடுகளிலிருந்து ஒருவரும் கலந்து கொள்ள முடியவில்லை.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சாதனையை இந்திய விராங்கனை ஒருவர் நிகழ்த்துவது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top