அடுத்த 38 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் – வானிலை ஆராய்ச்சி மையம்

சென்னை:

கடந்த 24 மணி நேரமாக சென்னையில் மழை பெய்தது. நேற்று இரவு மழை பெய்ய துவங்கியது மீனம்பாக்கத்தில் 59 மில்லிமீட்டர், நுங்கம்பாக்கத்தில் 30 மில்லிமீட்டர் மழை மழைபெய்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியது. இது கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் 210 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 38 மணி நேரத்திற்கு கனமழை தொடர்ந்து பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலில் சீற்றம் ஏற்படலாம் என்பதால் தென் மாவட்ட மீனவர்கள், கேரளாவின் தென் பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடதமிழகத்தில் இருந்து தொலைதூரத்தில் நிலை கொண்டு இருக்கும் இந்த காற்றுழத்த தாழ்வு நிலையால் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்ய கூடும் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் .


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. Such significant changes in the weather conditions can negatively affect the habitual life in these places. The news articles can be more accessible with a website http://resumeperk.com/blog/out-of-box-ways-to-find-a-job-by-cv-editing-services.

Your email address will not be published.

Scroll To Top