கோவா சர்வதேச திரைப்பட நிறைவு விழா; சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது

 

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டுக்கான சிறந்த படம் ,இயக்குனர் ,நடிகர் ,நடிகை மற்றும் ஆளுமைக்கான விருதுகள்  வழங்கப்பட்டது

 

கோவா தலைநகர் பனாஜியில் மத்திய அரசின் சார்பில் 48-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. சுமார்100 நாடுகளிலிருந்து  200 படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டது. விழாவின் கடைசி நாளான நேற்று விருதுகள் வழங்கப்பட்டது.

 

இந்த ஆண்டின் சிறந்த படமாக ‘120 BPM ‘ என்கிற பிரஞ்சு திரைப்படம் தங்க மயில் விருதுபெற்றது . தன்பாலின  விருப்பம் கொண்ட  கதையை தளமாக கொண்ட இந்த படத்தை இயக்கிய  ராபின் காம்பில்லோ[ Robin Campillo] மொரோக்கோவில் பிறந்து பிரான்சில் வாழும் கலைஞன்.இவருடைய படங்கள் எண்ணற்ற விருதுகளை பெற்று இருக்கிறது.

மற்றும், இந்த ஆண்டின் சிறந்த இயக்குனர் விருதை சீனாவைச்சேர்ந்த பெண் இயக்குனர் விவியன் க்யூ [Vivian Qu ] தன்னுடைய ‘Angels Wear White’ என்ற படத்திற்கு பெற்றார்.

இந்த ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான விருது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது. மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி இந்த விருதை அவருக்கு வழங்கினார். மலையால நடிகை பார்வதிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. டேக் ஆப் என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதே டேக் ஆப் படம் நடுவர் குழு விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

நாஹுயேல் ப்ரெஸ் பிஸ்கயாத் சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றனர். பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், அக்‌ஷய் குமார் உள்பட பல நடிகர், நடிகைகள் நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top