செவிலியர் போராட்டம்:‘ஊதியம் வழங்கவில்லை என்றால் வேலையை விடுங்கள்’ – தலைமை நீதிபதி

பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்களாக நர்சுகள் நடத்திவரும் போராட்டத்திற்கு மனிதாபிமானமின்றி சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

 

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 9990 நர்சுகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.7700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வும் ஆண்டுக்கு ரூ.500 வீதம் வழங்கப்படுகிறது. MRB என்கிற மருத்துவ தேர்வு வாரியம் மூலம்  தேர்தேடுக்கப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சென்ற பின் பணி நிரந்தரம் செய்வது இயல்பு,அதுதான் சட்டம்.ஆனால்  2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் நியமிக்கப்பட்ட இவர்களை தமிழக அரசு  தங்களை பணிநிரந்தரம் செய்யவில்லை. ஆகையால் பணி நிரந்தரம் செய்யச்சொல்லி செவிலியர்கள்  போரடி வருகிறார்கள்

நேற்று முன்தினம் திடீரென சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் 2,000 நர்சுகள் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து போராட்டத்தில் இறங்கினர்.

போராட்டத்தை முடக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இருப்பினும், தங்களது கோரிக்கையில் உறுதியாக இருக்கும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நர்சுகளுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

அமைச்சர் விஜய பாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. பணி நிரந்தரம் செய்வது உடனே சாத்தியமில்லை என அரசு தெரிவித்துள்ளது. நர்சுகளின் போராட்டத்திற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை அவசர வழக்காக தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரித்தது. முறையாக நோட்டீஸ் கொடுத்த பின்னர் தான் போராட்டத்தை அறிவித்ததாக நர்சுகள் சங்கம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தை கைவிடப்படும் வரை நர்சுகளின் வாதத்தை ஏற்கப்போவதில்லை என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

 

இந்த ஜனநாயக நாட்டில் மக்களுக்கான நீதி கடைசியாக கிடைக்கும் இடம்  நீதிமன்றமாக இருக்கையில், அங்கும் நீதி மறுக்கப்பட்டால் எங்கு செல்வது? செவிலியர்கள் முறைப்படி தொழிற்சங்க தாவ சட்டமுறைப்படி நோட்டீஸ் கொடுத்து போராட்டத்தை நடத்துகிறார்கள், அவர்களது வாதத்தை கேட்பதுதானே முறை,தலைமை நீதிபதி வானளாவிய அதிகாரம் படைத்தவர்தான்.சட்டப்படி செயல் போராட்டத்தை நடத்தும் செவிலியர்களின் அதாவது கைக்குழந்தையோடு போராடும் பெண்களின் போராட்டத்தை அதன் அவசியத்தை காதுகொடுத்து கேட்பதுதானே நியாயம்.

மேலும், ஊதியம் வழங்காவிட்டால் வேலையை விடுங்கள் என்று கூறிய அவர் போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார். நர்சுகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி தமிழகத்தில் மருத்துவர், செவிலியர் பணியிடங்கள் எவ்வளவு காலி உள்ளது என கண்டறியுங்கள் என்றும் கூறினார்.

கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு பின்னர் இந்த மனு விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. The requirements for increasing the wages require a justification. You can use the website http://royalediting.com/complete-guide-to-thesis-editing to optimize the publication of the news articles.

Your email address will not be published.

Scroll To Top