சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அணிந்த ‘நம்பர் 10’ ஜெர்சிக்கு ஓய்வு – பி.சி.சி.ஐ. முடிவு

சச்சின் டெண்டுல்கர் என்றால் முதலில் நம்மக்கு நியாபகம் வருவது சத்தம் அதற்கு பிறகு நம்பர் 10; நம்பர் 10 என்றால் சச்சின் டெண்டுல்கர் என்று அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அவருடன் இணைந்த ஒன்றாக இருந்துவந்தது நம்பர் 10 சீருடை.

ஒருகாலத்தில் 99 என்ற எண்ணுடைய சீருடையை ஒருநாள் போட்டிகளில் அணிந்த வந்த சச்சின் டெண்டுல்கர் கால்பந்து ஜாம்பவான் அர்ஜெண்டீனவின் டீகோ மாரடோனாவின் தாக்கத்தில் நம்பர்10 என்ற சீருடையை அணிந்தார். சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் நம்பர் 10 பிரிக்க முடியாமல் இணைந்திருந்தது.

இந்நிலையில் அந்த நம்பர்10 சீருடையை வேறு எந்த வீரரும் அணிய முடியாத விதமாக அவரது நம்பர் 10 சீருடைக்கும் பிசிசிஐ ஓய்வு அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடைசியாக 2012-ல் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் நம்பர் 10 சீருடையுடன் களமிறங்கினார் சச்சின், இதன் பின்னர் 2013-ல் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார்,

கடந்த ஆகஸ்டில் கொழும்புவில் நடந்த ஒருநாள் போட்டியில் மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் இதே நம்பர்10 சீருடையை அணிந்து களமிறங்கியதையடுத்து சமூக வலைதளங்களில் பிசிசிஐ, தாக்குர் ஆகியோர் மீது சமூக வலைத்தளங்களில் கேலிச்சொற்களை வீசினார்கள். இதுகுறித்து ஷர்துல் தாக்குர் கூறும்போது, தான் எண் கணித நம்பிக்கை உள்ளவர் என்பதால் நம்பர்10 ஜெர்சி அணிந்ததாகத் தெரிவித்தார்.

”இதனால் தேவையற்ற சர்ச்சைகள் உருவாகி வீரர்கள் விமர்சனத்துக்கு ஆளாகின்றனர். எனவே அதிகாரபூர்வமற்ற முறையில் நம்பர் 10 ஜெர்சிக்கு ஓய்வு அளித்து விடுவோம். எனவே எந்த ஒரு வீரரும் இந்தியா ஏ, சர்வதேச போட்டியல்லாத லிஸ்ட் ஏ போட்டிகளில் நம்பர் 10 ஜெர்சியை அணியலாம், சர்வதேசப் போட்டிகளில் நம்பர் 10 ஜெர்சியை அணிய வேண்டாம்” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிரபல நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.

ஜெர்சிக்கும் ஓய்வு அளிக்கும் நடைமுறை என்பிஏ கூடைப்பந்து போட்டிகளில் நடைமுறையில் உள்ளது, கிரிக்கெட்டுக்குப் புதிது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top