இந்தியாவில் ஓ.எல்.எக்ஸ், குவிக்கர் போன்ற சேவையை துவங்கும் பேஸ்புக்

புதுடெல்லி:

பேஸ்புக் செயலியின் மார்கெட்பிளேஸ் (Marketplace) என்ற அம்சத்திற்கான சோதனை மும்பையில் துவங்கியுள்ளது, விரைவில் நாட்டின் மற்ற பகுதிகளிலும் வழங்கப்பட இருக்கிறது. பேஸ்புக் இந்திய செயலியில் பழைய பொருட்களை விற்பனை செய்யவும், வாங்குவதற்கான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

பேஸ்புக் அறிமுக படுத்தியுள்ள மார்கெட்பிளேஸ் அம்சம் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றவர்கள் விற்பனைக்கு பதிவிட்ட பொருட்களை வாங்கவும், பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யவும், முடியும். இந்த அம்சம் இந்தியாவில் ஓ.எல்.எக்ஸ். மற்றும் குவிக்கர் போன்ற தளங்கள் வழங்கும் சேவையை போன்றே இருக்கிறது.

பேஸ்புக்கின் மார்கெட்பிளேஸ் சேவை அமெரிக்கா உள்பட உலகின் 25 நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த சேவை ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்பட்டது. இந்தியாவில் குவிக்கர் போன்றே நிறுவனத்துடன் மார்கெட்பிளேஸ் போட்டியிடும்.

ஒவ்வொரு மாதமும் 200 கோடி பயனாளர்கள் பேஸ்புக் குரூப்களை கொண்டு பொருட்களை விற்கவும், வாங்கவும் முடியும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது. பேஸ்புக் செயலியில் ஷாப் ஐகான் விற்பனைக்கு உள்ள பொருட்களை பட்டியலிடும். இதில் நீங்கள் விற்பனை செய்ய வேண்டிய பொருளின் புகைப்படத்தை அப்லோடு செய்து முழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதேபோன்று வெவ்வேறு பிரிவுகளில் கிடைக்கும் பொருட்களை வாங்க முடியும்.

இந்தியாவில் பழைய பொருட்களை விற்பனை செய்யவும், வாங்கவும் ஓ.எல்.எக்ஸ். போன்ற தளங்கள் பிரபலமாக இருக்கும் நிலையில் பேஸ்புக் தளத்திலும் இதேபோன்ற சேவை பரபலாக வழங்கப்பட இருப்பது இந்தியா சந்தையில் ஓ.எல்.எக்ஸ். மற்றும் குவிக்கர் போன்ற நிறுவங்களுக்கு பெரும் பொடியாக அமையவுள்ளது. ஐரோப்பாவில் பேஸ்புக்கின் மார்கெட்பிளேஸ் கிரைக்ஸ்லிஸ்ட் மற்றும் ஈபே உள்ளிட்ட சேவைகளுடன் போட்டிபோட்டு கொன்று இருக்கிறது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top