டெஸ்டில் 300 விக்கெட்டை அதிவேகத்தில் கைப்பற்றி சாதனை படைத்த: அஸ்வின்

நாக்பூர்:

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை எடுத்தார் மற்றும் முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்து இரண்டு இன்னிங்ஸி சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். டெஸ்டில் 300 விக்கெட்டை அதிவேகத்தில் கைப்பற்றி உலக சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின் நிருபர்களிடம் கூறியதாவது:-

300 விக்கெட்டுகளை இரண்டு மடங்காக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 600 விக்கெட்டுகளை கைப்பற்றுவதே எனது இலக்காகும். இதுவரை 54 டெஸ்டுகளில் விளையாடி உள்ளேன்.

சுழற்பந்து வீச்சு எளிதானது அல்ல. தற்போது வீரநடைபோல் எழுந்து இருப்பது உங்களுக்கு தெரியும். ஆனால் அதற்கு பின்னால் நிறைய இருக்கிறது. நானும், ஜடேஜாவும் அதிகமான ஓவர்கள் வீசினோம். இதனால் விக்கெட்டுக்களை எடுப்பதற்கு உதவியாக இருந்தது.

இவ்வாறு அஸ்வின் கூறி உள்ளார்.

2017 ம் ஆண்டு கால அளவில் அஸ்வின் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை நிறைவு செய்துள்ளார். மூன்று முறை தொடர்ந்து 50 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த ஷேன் வார்ன் (ஆஸ்திரேலியா) மற்றும் முத்தையா முரளிதரன் ஆகிய இருவரை தொடர்ந்து 50 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய மற்றும் மூன்றாவது வீரர்.

டெஸ்டில் சாதனை படைத்து வரும் அஸ்வின் ஒரு நாள் போட்டியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் ஓரங்கட்டப்பட்டார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top