‘பத்மாவதி’ ரிலீசிற்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம், ‘பத்மாவதி’. ‘வியாகாம் 18’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளையும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாப்பாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல மாநிலங்கள் இந்த படத்துக்கு தடையும் விதித்து உள்ளன.

இத்தகைய சர்ச்சைகள் காரணமாக ‘பத்மாவதி’ திரைப்படம் வருகிற 1-ந் தேதி வெளியிடப்பட இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. எனினும் வெளிநாடுகளில் 1-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ‘பத்மாவதி’ திரைப்படத்தை இந்தியாவுக்கு வெளியே 1-ந்தேதி வெளியிடுவதை நிறுத்துமாறு தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிடக்கோரி எம்.எல்.சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்திய தணிக்கைக்குழு சான்று அளிக்கும் வரை ‘பத்மாவதி’ திரைப்படத்தை எங்கும் வெளியிடப்போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top