ஸ்பானிஷ் ஓபன் டேபிள் டென்னிஸ் – தங்கம் வென்றார் இந்திய வீரர் ஜி.சத்தியன்

அல்மெரியா :

ஸ்பானிஷ் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர் போட்டிகள் ஸ்பெயினின் அல்மெரியா நகரில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஜி.சத்தியன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

அவர், இறுதிப் போட்டியில் ஜப்பானின் காஸுஹிரோ யோஷிமுராவை எதிர்கொண்டார். இறுதிப்போட்டியின் முதல் செட்டை கைப்பற்றினார். அடுத்த செட்டை ஜப்பான் வீரர் கைப்பற்றினார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அடுத்த செட்டை சத்தியன் 11-6 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜப்பான் வீரர் நான்காவது செட்டை 6-11 என கைப்பற்றினார்.

அதன்பின் சுதாரிப்புடன் விளையாடிய சத்தியன் அடுத்த இரண்டு செட்டையும் 13-11, 11-7 என கைப்பற்றினார். இறுதிப்போட்டியில் சத்தியன் 11-7, 11-6, 13-11, 11-7 என்ற செட் கணக்கின் மூலம் வெற்றிபெற்றறார். இதன்முலம் 4-2 என்ற புள்ளிக்கணக்கில் வென்ற சத்தியன், தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

ஐ.டி.டி.எப். சேலஞ் தொடர்களில் அவர் வெல்லும் 2-வது சாம்பியன் பட்டம் இதுவாகும். முன்னதாக கடந்த 2015-ல் பெல்ஜியன் ஓபன் தொடரிலும் அவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஸ்பானிஷ் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் மனிகா பத்ரா – மவுமா தாஸ் ஜோடி 11-9, 6-11, 11-9, 9-11, 9-11 என்ற செட் கணக்கில் கொரியாவின் ஜிஹீ ஜியோன் – ஹேயுன் யாங் ஜோடியிடம் போராடி தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top