ஆய்வுக்கு சென்ற இடத்தில் கவர்னர் கிரண்பெடிக்கு கருப்புக்கொடி

புதுவையில் தங்கி இருக்கும்போது வாரந்தோறும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கவர்னர் கிரண்பெடி ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி நேற்று தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக வளாகத்தில் உள்ள கடலோர காவல் நிலையத்திற்கு கவர்னர் கிரண்பெடி ஆய்வுக்கு சென்றார். அவரை போலீஸ் சூப்பிரண்டுகள் அப்துல்ரகீம், ரச்சனாசிங் ஆகியோர் வரவேற்று கடலோர காவல்நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்கள்.

 

அப்போது அவர்களிடம் கவர்னர் கிரண்பெடி, சுற்றுலா மற்றும் மீன்வளத்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து தெரிவித்தார்.

 

ஆய்வுக்கு வந்த கவர்னர் கிரண்பெடியை படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் சந்தித்துப் பேசினார்கள். அப்போது கடல் முகத்துவாரம் தூர்ந்து போனதால் மீன்பிடிக்க செல்லாமல் இருந்த காலத்திற்கு நிவாரணமாக படகு ஒன்றுக்கு ரூ.75 ஆயிரம் அமைச்சரால் அறிவிக்கப்பட்ட தொகை வழங்கப்படாமல் உள்ளதாக தெரிவித்தனர். அதை உடனடியாக வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

 

இதுதொடர்பாக தலைமை செயலாளரை சந்தித்து பேசுமாறு அவர்களிடம் கவர்னர் கிரண்பெடி தெரிவித்தார். இதற்கிடையே கவர்னர் ஆய்வுக்கு வந்த தகவல் தேங்காய்த்திட்டு கிராம மக்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் மீன்பிடி துறைமுக வாசல் பகுதிக்கு திரண்டு வந்தனர்.

 

அவர்கள் நலத்திட்ட உதவிகளை தடுத்து வரும் கவர்னரே வெளியேறு என்று கோ‌ஷங்களை எழுப்பியபடி கருப்புக்கொடி காட்டினார்கள். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top